Tamil Kavithai Tamil Status

❤️காதல் கவிதைகள் | Tamil Love Status❤️

❤️எனக்கான மனிதர்களை தேடிப் பார்க்கவே
கடினமான நேரங்களை எனக்கு நானே உருவக்கி
மறைந்திருந்து காத்திருக்கிறேன்
உலகம் பெரிதென….
❤️காதல் என்பது இப்படி தான் என முடிவிற்கு வருபவர்கள்.. இன்னும் காதலிக்க தொடங்கவில்லை என்றறிக காதலை படிக்க
ஒரு ஜென்மம் போதாது….


❤️எத்தனை துன்பம்
இருந்தாலும்
மறந்து போகிறேன்
உன்னோடு பேசும்
அந்த நேரத்தில் மட்டும்…

❤️பிரியமானவர் பிரியமாக கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது பிரிவு….


❤️பயமற்ற திருட்டு தயக்கமற்ற திருட்டு குற்ற உணர்வற்ற திருட்டு பிறர் மனதை திருடும் போதான திருட்டில் ஈடுபடுவோருக்கான சந்தோஷம்….
❤️உரிமையுள்ள இடத்தில் தான் நம் எண்ணங்களும் ஆசைகளும் வெளிப்பட தயங்கி தவிக்கும்….

❤️நான் வழிப்போக்கன் தான் என உணர்ந்த தவறிய அவனை வழி துணை என நினைத்தேன் வாழ்க்கை துணை என நினைக்க தொடங்கினேன் நான் ஆயுள் முழுவதும் உன் வலி துணை என உணர்த்தினான்….
❤️எத்தனை அழகாக இருந்தாலும் கண்களை தாண்டி மனதிற்குள் போனால் மட்டுமே பேரழகு…

❤️பல ஆடை வண்ணங்களில் நீ வந்தாலும் சிவந்த உதட்டை விட அந்த கருத்த கண் விழிகள் பேரழகு…
❤️நொடியினில் மாறிடும் வானிலையாய் வலியினில் துடித்திடும் மனநிலையும்! சீறிப்பாயும் பேரலையும் கடலை வந்து சேராதா? சினத்தில் புயல் அடிக்கும் மனநிலையும் பின் காதல் வசப்படாதா?


❤️நீர் இல்லாமல் தவிக்கும் காவரி ஓடைகள்போல பெண்ணே
நீ இல்லாமல் தவிக்கிறேன்
தேனீ தேடிவந்து காத்திருக்க பூ,
தேனை சொட்ட மறுப்பதினால் யாருக்கென்ன லாபம் காலம் கடத்தும் பெண்ணே
உன் கண்கள் ஓரம் சொல்லுதே நின் நெஞ்சம்
❤️வானம் பார்த்த பூமி இது வண்ணம் ஒன்றும் தேவை இல்லை!
மரம் வைத்தால் மழை தருமே! மழை சேர்த்தால் உயிர் தருமே!
அழித்தோமே புதைத்தோமே நாம் வாழ சொர்க்கத்த தொலைத்தோமே!
அள்ள அள்ள கொடுத்து வந்தா அன்பான பூமிதாய்!

Related posts

❤️Natpu Kavithai Status | நட்பு கவிதை❤️

admin

💝Tamil Sad Quotes | தமிழ் சோக கவிதை💝

admin

💗Amma Kavithai Status | அம்மா கவிதை Status

admin

Leave a Comment