Uncategorized

❤️நட்பு கவிதை |❤️Natpu Kavithai Status

 Natpu Kavithai Status | நட்பு கவிதை 

நட்பு கவிதைகள், நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்


❤️ அகதிகளாய் திரிந்தோம்அடைக்கலம் தந்தாய்.,
அனாதைகளாய் இருந்தோம்அன்பு தந்தாய்.,
சிறகுகள் முளைத்துபறந்து சென்றோம்
இறையை தேடி _ பின்திரும்பினோம் சிறையைநாடி..!


❤️ வானம் நிறைந்த விண்மீன்கூட்டமும்,
உள்ளம் நிறைந்த நண்பர்கூட்டமும்,
பார்க்க என்றும் அழகுதான்நண்பா..!
❤️ உருகும் முழுமதியை தேடினாய்….. அன்டமெல்லாம்…
கார்முகில் களவில் மறைந்துகானாது உன் மதியை.,
நிலையிலா கார்முகில் நிலைத்திட‌சிறு தென்றலும் ஓய்வுறாது…
கானலாகும் கார்முகில் உன்சுயம்வ‌ரம் வாழ்த்திடுமே ‍_பூமழையாய்..!


❤️ இறைவன் இல்லா இடத்தில்தாயின் அன்பு கருனை,
தாய் இல்லா இடத்தில்நன்பனின் அன்பு கருனை
எனக்காக உயிர் கொடுக்கும்நட்பு வேண்டாம் _ஆனால்,
எனக்காக கண்ணீர் சிந்தும்நட்பு போதும் _அன்போடு..!


❤️ ஒரு நண்பன் வேண்டும்❤️


❤️ எப்போதும் 
விரல் பிடித்தபடி 
என்னை வழிநடத்த ! 

என் சோகங்களுக்கு 
மடி தந்து 
தலை வருட! 

என் முகம் 
பார்த்து மட்டுமே 
பேசிச் சிரிக்க! 

தெரியாமல் என் 
கால் இடறிவிழுந்தாலும் 
பதறி வந்து தோள்கொடுக்க! 

முடியாத நேரத்தில் 
முகம் வருடி 
உச்சியில் முத்தமிட! 

எங்கு சென்றாலும் 
எவர் இருந்தாலும் 
என் தோழி இவளென 
கர்வமாய்ச் சுற்றித்திரிய! 

ஆடை நகர்ந்தாலும் 
தயக்கமின்றி 
சீர்படுத்தச் சொல்ல! 

கண்களைத் தாண்டி 
நம்பிக்கை என்னும் வேரை 
மனதுவரை துளிர்விடச்செய்ய! 

கூச்சமேதும் இல்லாமல் 
நெருங்கி நின்று 
புகைப்படமெடுக்க! 

நடுநிசியானாலும் 
குரல் நடுக்கமின்றி 
நட்பாய்ப் பேசிட! 

யாவற்றுக்கும் மேலாய் 
காதலென்றும் காமமென்றும் 
பிதற்றாத அன்பினை 

வாழ்நாள் முழுக்க 
அள்ளித் தந்திட 
ஒரு நண்பன் வேண்டுமெனக்கு ! 


❤️ அன்புத் தோழியே ❤️


❤️ அன்புத் தோழியே
எங்கிருக்கிறாயடி ? 
அடுக்கலையில் வேலையிலும்
அலுக்காமல் உன் நினப்பு
வந்து என்னை வாட்டுதடி

நீ வரும் நேரம் சொல்லடி
வாசலில் காத்திருப்பேனடி
உன்ன காணாம தேடி 
பதைபதைக்குதடி மனசு
நோவுகொண்டு வாடினாயோ

வேலை பலுவில் சோர்ந்தாயோ
நெஞ்சுப்பாரம் அழுத்தியதோ
சொல்லவியலாத் துயரமோ
விழியில் கோர்க்கும் கண்ணீரோ

ஓடி வந்துவிடடி காத்திருக்கேன்
கோப்பையில் தேநீர் நிரப்பி
வந்து சாய்ந்துகொள்ளடி
இந்த தாயின் மடி உனக்கே❤️ நண்பனோடு காலார நடப்பது மகிழ்ச்சி 
காதலியோடு கைகோர்த்து நடப்பது மகிழ்ச்சி 
கவிதையில் சொல்லோடு நடப்பது மகிழ்ச்சி 
மழையில் குடையின்றி நனைவது மகிழ்ச்சி 
கோடையில் மரநிழலில் நிற்பது மகிழ்ச்சி 
மாலையில் அவள்வரக் காத்திருப்பது மகிழ்ச்சி 
தெருவோரத் தேநீர்க்கடையில் பருகுவது மகிழ்ச்சி 
தென்னங்கீற்று நிழலில் இளநீர் அருந்துவது மகிழ்ச்சி 
பனைமரத்து பதநி பருகுவதற்கு ஈடு ஏது மகிழ்ச்சி 
இணையத்தில் நண்பர்களோடு இதைப் பகிர்வது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி !


❤️ பாசத்தோடும் ….
அன்போடும் ……
இரக்கத்தோடும் ….
வளர்த்த குழந்தையிடம் 
எதிர்பார்ப்புடனும் …
ஒரு கேள்வி கேட்டேன்…??
*
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
*
ஒரு நொடி கூட தயங்காமல் …
தோழியின் பெயரைச் சொல்லி…
நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் …!!!
^^^
போடா இனிமேல் …
வாழ்க்கையில் பேசாதே 
நீ ஒரு மனிதனா …?
நான் செத்தாலும் என் ..
முகத்தில் முழிக்காதே …
எவ்வளவு கேவலமாய் ……..
திட்டினாலும்……..!!!
சிரித்துகொண்டேதான்
பதிலளித்தான் ..
உன்னைவிட்டால் எனக்கு ..
யாரடா இருக்கிறார்கள் ..?
என் உயிர் நண்பன் ..
இந்த சொல் என்னையே 
கொன்று விருக்கிறது …….!!!
^^^
வருடங்கள் மாறும் 
பருவங்கள் மாறும் 
எண்ணங்கள் மாறும் 
உருவங்கள் மாறும் …
ஊர்கள் மாறும் …
தேசங்கள் மாறும் …
தேகம் கூடமாறும் …
மாறாது மாறாது …
அன்றுபோல் இன்றும்..
உயர்ந்தே இருக்கிறது…
நம் உன்னத நட்பு…..!!!❤️ உயிர் நட்பே ❤️


❤️ உன் பார்வையில் கிடைத்த ஆறுதல்
 உன் புன்னகையில் முளைத்த சந்தோசம்
உன் வார்த்தைகளில் நிறைந்த பரிவு
 உன் அருகாமையில் துளிர்த்த மனநிறைவு…

யாவையும் நிரந்தரமாய் கனாகண்டிருந்தேன்
நிலையில்லாது பகற்கனவாய் மறைந்துவிட்டாய்!

அருகிலிருந்தும் விலகி நின்றாய்
வார்த்தையின்றி வதைக்கின்றாய்
புன்னகையின்றி சுடுகின்றாய்!!

விழியிழந்த பறவை போல்
தத்தளிப்பில் தவிக்கவிட்டாய்
உன்னிடம்  நான்கொண்ட அன்பை
உன் பிரிவில் உணரவைத்தாய்…

உன்னால் அடைந்த சந்தோசத்தை
உன்னால் இன்று இழக்கவைத்தாய்
மகிழ்ச்சிக்கண்ணீரில் நனைந்த என்னை
துயரக்கண்ணீரில் மூழ்கவிட்டாய்!!

நிலைத்திருந்த என் உயிர் நட்பே…!
இறப்பிலும் என்னுள்ளே நீயிருப்பாய்…


❤️ என் நட்பை ஏற்றுக்கொள்வாயா? ❤️

❤️ என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாய்
 மனம் திறக்க வழி வகுத்தாய்

பெரும் சுமையைத் தாங்கி நின்றேன்
 மனச்சுமையப் பகிர்ந்து கொண்டாய்

மௌன மொழியால் ஆறுதலளித்தாய்
 சோகம் மறந்து சிரிக்கவைத்தாய்

கலங்கிய மனதைத் தெளியவைத்தாய்
 கண்ணீர் சிந்தாதிருக்க புன்னகை பூத்தாய்

என் தனிமை மறக்கத் துணையிருந்தாய்
 நட்பின் இலக்கணம் புரியவைத்தாய்

ஆதலால், இன்று பிறந்த என் நட்பே…
 இன்று முதல் நீ என் உயிர் நட்பு.❤️ இதயத்தை …..
கிள்ளிப்பார்த்துவிட்டு ……
வலிக்கிறதா என்று கேட்டால் …
காதல் …!!!

இதயத்தை ……
கிள்ளிப்பார்காமலே …
வலிக்கிறதா என்று கேட்டால் …
நட்பு …!!!

இதயத்தில் ….
இருந்துகொண்டு ….
கிள்ளிக்கொண்டே ….
இருந்தால் …….
மனைவி ……….!!!


❤️ நீ 
காதலியில்லை என்பதை ……
யாரும் நம்புவதாய் இல்லை …..
இத்தனை அழகியை யார் தான் …..
நம்புவார்கள் ……….???

உன்னோடு கைகோர்த்து ……
நடக்க ஆசைப்படுகிறேன் ……
நரிகள் உள்ள இருட்டு உலகில் …..
சற்று பயமாகவும் இருக்கிறது …..
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் …..
நிச்சயம் ஒருநாள் நிகழும் ……!!!

Related posts

Thirukural-Paayiraviyal-திருக்குறள்/அறத்துப்பால்/பாயிரவியல்

admin

Tamil Kavithai Status|தமிழ் காதல் கவிதை

admin

திருக்குறள்-அறத்துப்பால்- வான்சிறப்பு-Thirukural-The Blessing of Rain

admin

Leave a Comment