Natpu Kavithai Tamil Kavithai

❤️Natpu Kavithai Status | நட்பு கவிதை❤️

❤️ Natpu Kavithai Status | நட்பு கவிதை ❤️

நட்பு கவிதைகள், நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்



❤️ என்றுமே தோழி நீயடி 
துடி துடித்த போது,
துணையாய் நின்றாய் .
சொந்தங்களை இழந்த போது,
சொந்தமாய் நின்றாய் .
தோல்வியை அறிந்த போது,
தேற்றரவாய்   ஆனாய்.

நீ இருந்த காலம்
நினைவுகளில் உள்ளதடி
நியங்களில் இன்று – நீ
இல்லயடி
ஆதரவாய் இருந்தவள்,
அநாதரவாய் ஆக்கி விட்டால் .
எது எவ்வாறாயினும் அன்பு தோழி,
என்றுமே தோழி நீயடி



❤️ நலமாய்  உள்ளது
நட்புடன் உறவாடிய நாட்கள்,
எண்ணி பார்க்க
நலமாய்  உள்ளது.
நடமாடி திரிந்த வீதிகளிலும்,
நம் நினைவுகள்
நலமாய் உள்ளது.
சற்றே கலங்குகிறேன்
நினைவுகளில் மட்டுமே ,
நாம் அருகில்  இருப்பதால்
நியங்களில்  தொலைவில் இருப்பதால்,
 நட்புடன் நலமாய் திரிந்தோம்
நண்பிகள் நாம் – இன்று
பிரிந்தும் பிரியாத நம் உறவில்
புது சுகம் உள்ளதடி அன்பு தோழிகளே.



❤️ ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்…
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல “நண்பர்கள்”
எனக்கு கிடைத்த உன் நட்பு போல, அந்த வானத்துக்கும் உன்னுடைய நட்பு கிடைக்கவில்லை என்று வானம் சிந்தும் கண்ணீர் தான் மழை.
என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும் – நான்
மண்ணோடு புதையும் வரை…
நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நட்பை…



❤️ வானமும் பூமியும் இறைவணின் சொத்து, 
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து, 
நீயும் நானும் கடவுளின் படைப்பு, 
என்றும் பிரிய கூடாது “நம் நட்பு’ 





❤️ “சிறகு கிடைத்த உடன் பறப்பது அல்ல நட்பு… சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு”


❤️ நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்..
ஆனால் முடியவில்லை.
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்?



❤️ அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது 


❤️ நட்பிலும் பிரிவா? ❤️

காரணம் இன்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள்  சேர்தலும் நட்பில் மட்டும் சாத்தியமா?
பிரிவு தான் அன்பின் ஆழத்தை அழக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அழக்காதா?
என் நீண்ட நாள் நட்பில் வந்த
பிரிவு  குறுகியதல்லவே
நீதானே என் உயிரினும் மேலான
ப்ரியசகி அல்லவோ
என் நீண்ட மௌனம்
என் பிரிவை உனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று நீ எனை விட்டுப் பரிந்தாய்
என் தோழமை மறக்காது சென்றாய்
நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
பிறர் நம் நட்பில் கண்வைத்த போதும்
நம் நட்பில் பிரிவேது
நம் நட்பிலும் பிரிவு
இது சாத்தியமா?
சொல்வாய் என் உயிர்த் தோழி


❤️ “கண்ணில் ஒரு மின்னல்” 
“முகத்தில் ஒரு சிரிப்பு” 
“சிரிப்பில் ஒரு பாசம்” 
“பாசத்தில் ஒரு நேசம்” 
“நேசத்தில் ஒரு இதயம்” 
அந்த “இதயத்தில் என் நண்பன்/தோழி நீ”

❤️ தோழா ……. 
அனைத்தும் சொன்னேன் 
ஒன்றை மட்டும் விட்டுவிட்டு 
உன் மடியில் 
தலை சாய்க்க வேண்டும் என்று

Related posts

💝Tamil Sad Quotes | தமிழ் சோக கவிதை💝

admin

💗Amma Kavithai Status | அம்மா கவிதை Status

admin

❤️காதல் கவிதைகள் | Tamil Love Status❤️

admin

Leave a Comment