Amma Kavithai Tamil Kavithai

💗Amma Kavithai Status | அம்மா கவிதை Status


💗 Amma Kavithai Status | அம்மா கவிதை Status


Here are the Latest Collections of Tamil Amma Kavithai and Quotes.💗 அம்மா!!
உன் கருவறையில் நானிருந்து
உதைத்தது–உன்னை
நோகடிக்க அல்ல,,,
எட்டு மாதமாய் சுமக்கும்–உன்
முகம் பார்க்கவே.
பிஞ்சு வயதில் நான் அழுதது,,
பசியினால் அல்ல,,
பால் குடிக்கும் சாட்டில்–உன்
இதயத்தை முத்தமிட..
பள்ளியில் என்னை சேர்க்கும்போது–நான் அழுதது
பயத்தினால் அல்ல,,
உன் பாசத்தை பிரிகிறேனோ,,
என்ற பயத்தினால்.
இளமையில் நான் அழுதது
காதலில் கலங்கி அல்ல,,
கல்யாணம் உன்னிடத்தில் இருந்து–என்னை
பிரிக்குமோ என்ற பயத்தினால்..
நான் விமானம் ஏறும்போது அழுதது–பிரிகிறேன் என்றல்ல,,
நான் உழைத்து உன்னை
பார்க்கப்போகிறேன்–என்ற
ஆனந்தத்தில்..
இங்கு தனிமையில் அழுகிறேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல
உன் தாய் அன்பு காணாமல்..
அம்மா!!!
உன் இறப்பின் பின் நான் அழுவேன்-நீ
இறந்ததால் அல்ல,,
உலகில் பாசமே இறந்ததால்..
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா–நீ
அழவேண்டாம்–ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..💗 தாயே
உதிரத்தை பாலாக்கி
உயிர்தனை தினம் தந்து
குழந்தைகள் வாழ்வுக்காக 
தினம் தன்னைத் தியாகம் செய்பவள்
பகல் முழுவதும் அடிப்படியில் புழுவாக வெந்து
இரவு முழுவதும் விளக்கமாக விழித்திருந்து
தன் சேய்க்க்யாக உறக்கம் துறந்து
குழந்தையின் மகிழ்வில் மகிழ்ந்திருப்பால்

பிரம்மானின்அவதாரமாக உலகில் உதித்தவள்
அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள்
தியாகத்தின் உச்சகட்டமாக மிளிர்பவள்
அதுதான் தி எனும் உறவு

உலகம் வெறுத்து ஒதுக்கினாலும்
உறவுகள் விட்டு விலகினாலும்
வறுமை வந்து வாட்டினாலும்
தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்


💗 என் அம்மா 
அம்மா என்ற  வார்த்தையில்
 அகிலம்  அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி,
கடவுளின் கருணை நீயடி,
பெண்மையின் சிறப்பு நீயடி,

புரியாத புதுமை நீயடி,
புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
பண்பின் பல்கலை  கழகம் நீயடி,
பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,

பிள்ளைகளின் ஆசான் நீயடி,
குடும்பத்தின் குணவதி நீயடி,
தியாகத்தின் திருபீடம்  நீயடி,
திருவருள் தரும் தெய்வம் நீயடி,

அதுவே என் அம்மா.


💗 தாயன்பு
கைதியை கட்டி போடும் அன்பை
கண்டதும் உன்னிடம்தான்
கண்ணே என்ற போது – என்
உள்ளத்திலே அமுதம் சுரக்கின்றது.

கருவறையில் இருக்கும் போதே
 இதயவறை  தந்தாய் – இனியவளே
இன்றும் இறைவனிடம் எனக்காய்
பிரார்த்திக்க மறக்கவில்லை நீ

தாயே இதுவரை – உன்
 உள்ளம் குளிர எதுவும் செய்யவில்லை
இன்றும் என்னை எறிந்து விடவில்லை,
இதயத்தில் இருந்து 💗 தயங்காதே  என்றும்
கதறி அலுத்து பெற்றேடுத்தேனே 
கண்ணா நீ கதறி அழுதால்  அல்ல 
கண் கலங்கினால் கூட – நான்
கன்னி தி கன்னி மரியிடம்
கையேந்துவேன்  மகனே

உதிரம் தந்த என்னால்
உன் உடம்பில்
உதிரத்தை பார்க்க
தைரியம் இல்லையடாசரித்தரம் படைத்தாலும் சரி
சறுக்கி விழுந்தாலும் சரி
சாய்ந்து தூங்க   தாய்
மடி உள்ளது கண்ணே
தயங்காதே என்றும்.


💗 வாழும் தெய்வம் 
வாழ்நாளெல்லாம் வாழ்க
என் வாழ்த்தும்,
வாழும் தெய்வம்
என் தாய்தானே!

வந்தாரை இன்முகம் கொண்டு
வருக என் வரவேற்கும்
வள்ளல்தெய்வம்
தாய்தானே!

வஞ்சொல்லால் வைத்தாலும் 
வாய் திறந்து பேச
பெருந் தெய்வம்
என் தய்தனே!


ஊதாரியாய்  இருந்தாலும் 
ஊட்டி வளர்க்கும்
நல்ல  தெய்வம்
என் தய்தனே!

Related posts

❤️காதல் கவிதைகள் | Tamil Love Status❤️

admin

💝Tamil Sad Quotes | தமிழ் சோக கவிதை💝

admin

❤️Natpu Kavithai Status | நட்பு கவிதை❤️

admin

Leave a Comment