தமிழ் பழமொழிகள்-Tamil Proverbs :Tamil Pazhamozhigal

0
[vc_row][vc_column][vc_custom_heading text=”தமிழ் பழமொழிகள்-Tamil Proverbs :Tamil Pazhamozhigal” font_container=”tag:h1|font_size:20|text_align:left” use_theme_fonts=”yes”][vc_column_text]

தமிழ் பழமொழி Tamil Proverb #List01

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

* அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

* அழுத பிள்ளை பால் குடிக்கும்.

* அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்

* அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

* அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன

* அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்

* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்

* அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

* அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

* அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

* அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

* அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

* அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

* அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

* அற்ப அறிவு அல்லற் கிடம்

* அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

* அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

* அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும்சொல்லுக்குறுதி.

* ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

* ஆழம் தெரியாமல் காலை விடாதே.

* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.

* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.[/vc_column_text][/vc_column][/vc_row]

Share.

About Author

Leave A Reply