தமிழ் பழமொழிகள்-Tamil Proverbs

0

தமிழ் பழமொழிகள்-Tamil Proverbs

நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பெரியவர்களும், மற்றவர்களும் அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழியை உதாரணமாக கூரிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். இந்த பழமொழிகள் பேச்சு வாக்கில் சுவரசியதிர்க்காக மட்டும் பயன்படுத்தப்படுபவை அல்ல, அவற்றுள் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. இன்னும், கூறப்போனால், பழமொழியை (proverb) நன்கு புரிந்து கண்டு ஒருவர் தன் வாழ்க்கையில் அதனை பின்பற்ற எண்ணினால், நிச்சயம் நல்ல நெறிகளோடு வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மேலும் சில புதுமையான பழமொழிகளை (tamil pazhamozhi) தெரிந்து கொள்ளவும், இங்கே உங்களுக்காக ஒரு சுவாரசியமான தொகுப்பு!

தமிழ் பழமொழி Tamil Proverb #01

* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

தமிழ் பழமொழி Tamil Proverb #02

* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

தமிழ் பழமொழி Tamil Proverb #03

* அடியாத மாடு படியாது.

தமிழ் பழமொழி Tamil Proverb #04

* அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

தமிழ் பழமொழி Tamil Proverb #05

* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

தமிழ் பழமொழி Tamil Proverb #06

* அகத்தினழகு முகத்தில் தெரியும்.

தமிழ் பழமொழி Tamil Proverb #07

* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

தமிழ் பழமொழி Tamil Proverb #08

* அகல உழுகிறதை விட ஆழ உழு.

தமிழ் பழமொழி Tamil Proverb #09

* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

தமிழ் பழமொழி Tamil Proverb #10

* அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

தமிழ் பழமொழி Tamil Proverb #11

* அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

தமிழ் பழமொழி Tamil Proverb #12

* அடக்கமே பெண்ணுக்கு அழகு.

தமிழ் பழமொழி Tamil Proverb #13

* அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

தமிழ் பழமொழி Tamil Proverb #14

* அடாது செய்தவன் படாது படுவான்.

தமிழ் பழமொழி Tamil Proverb #15

* அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

தமிழ் பழமொழி Tamil Proverb #16

* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

தமிழ் பழமொழி Tamil Proverb #17

* அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

தமிழ் பழமொழி Tamil Proverb #18

* அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

தமிழ் பழமொழி Tamil Proverb #19

* அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

தமிழ் பழமொழி Tamil Proverb #20

* அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

Share.

About Author

Comments are closed.