Tamil Proverbs – தமிழ் பழமொழிகள்

0
[vc_row][vc_column][vc_custom_heading text=”Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் ” font_container=”tag:h1|font_size:20|text_align:left” use_theme_fonts=”yes”][vc_column_text]Tamil Proverbs – தமிழ் பழமொழிகள் #List02[/vc_column_text][vc_column_text]* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

* ஆனைக்கும் அடிசறுக்கும்.´

* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

* இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

* இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

* இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு..

* இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

* இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

* இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

* இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

* இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

* இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

* இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.

* இல்லாது பிறாவது அள்ளாது குறையாத

* இளங்கன்று பயமறியாது

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இளமையிற்கல்வி கல்மேல் எழுத்து.

* இளமையில்சோம்பல் முதுமையில்வருத்தம்.

* இறங்கு பொழுதில் மருந்து குடி

* இறுகினால் களி , இளகினால் கூழ்.

* இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

* இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

* இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

* இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

* உடல் உள்ள வரையில் கடல்கொள்ளாத கவலை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

* உண்ணாச்சொத்து மண்ணாய்ப்போகும்.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

* உலோபிக்கு இரட்டை செலவு.

* உளவு இல்லாமல் களவு இல்லை.

* உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல,

* உள்ளது போகாது இல்லது வாராது.

* உள்ளம் தீயெரிய உதடு பழஞ்சொரிய..

* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

* ஊசியைக் காந்தம் இழுக்கும் *உத்தமனைச்சிநேகம் இழுக்கும்.

* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப்பிந்துவான்.

* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

* எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

* எதார்த்தவாதி வெகுசன விரோதி.

* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

* எதை அடக்காவிட்டாலும் நாக்கைஅடக்கவேண்டும்.

* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.[/vc_column_text][/vc_column][/vc_row]

Share.

About Author

Leave A Reply